தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

புலிகளின் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த ரெஜிக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னேஸ்வரம் ஆலய பூசகர்களுக்கு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:11.13 AM GMT ]
சிலாபம் முன்னேஸ்வரம் ஆலய பூசகர்களுக்கு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னேஸ்வரம் ஆலய மிருக பலி பூஜைக்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்ட போது, முன்னேஸ்வரம் ஆலய பூசகர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இதனை அடுத்து குறித்த இரண்டு பூசர்களுக்கும் சிலாபம் நீதவான் ஏ.கஹந்தகமகே பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைகளை செப்டம்பர் மாதம் 20ம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்துள்ளார்.
பிரதம பூசகர் காளிமுத்து சிவபாக்கியம் மற்றும் துணைப் பூசகர் மஹேந்திரசாமி ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிருக உரிமை பாதுகாப்பு செயற்பாட்டாளரான சட்டத்தரணி லலனி சேரசிங்க என்பவரினால் குறித்த இருவருக்கும் எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புலிகளின் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த ரெஜிக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 03:14.50 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தை உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்த ரெஜி என்ற நபருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு வங்கியொன்றிலும் உள்நாட்டு வங்கியொன்றிலும் சுமார் 86 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது.
பிரபலமான வெளிநாட்டு வங்கியொன்றில் 56 மில்லியன் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த வைப்புப் பணங்களை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது.
பணத்தை வைப்புச் செய்த ரெஜி என்பவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten