[ புதன்கிழமை, 05 யூன் 2013, 03:14.20 PM GMT ]
அவுஸ்திரேலிய உயரதிகாரிகளுக்கும் - பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையே இந்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் - சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்த, ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஆட்கடத்தல் நடவடிக்கையானது தற்போது மிகவும் இலாபம் தரும் சட்டவிரோத செயலாக காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
பொதுநலவாய மாநாட்டிற்கு நியூஸிலாந்து பூரண ஆதரவு
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 04:11.57 PM GMT ]
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு நியூஸிலாந்து பூரணமாக ஆதரவளிக்கும் என்று நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்கேலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்கேலிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிவில் யுத்தத்தை தொடர்ந்து இடம்பெற்றுள்ள நல்லிணக்க முன்னேற்பாடுகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளைப் போலவே இலங்கையையும் பொதுநலவாய நாடுகள் அணுக வேண்டும்!- கனடா
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 02:56.31 PM GMT ]
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் இழக்கப்பட்டு வருவதாக கனடா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளை இதற்கு முன்னர் பொதுநலவாய நாடுகள் எவ்வாறு அணுகியதோ, அதேபோல, இலங்கையையும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுநலவாய நாடுகள் அமைப்பான தூதுவர் ஹுஜ் சேகல் இதனை பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமது பொறுப்புக்கூறும் தன்மையை நிலைநிறுத்தும் வகையில் எந்த விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்வதற்கான சமிஞ்கைகள் தென்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை கொழும்பில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் எந்த அளவான குழு பிரசன்னமாகும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten