donderdag 6 juni 2013

வாக்காளர் பற்றிய சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது: உச்ச நீதிமன்றம்

போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 11:44.08 AM GMT ]
போலி கடவுச்சீட்டுடன் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கைக்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏற முயன்ற போதே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
51 வயதான ஜமால் என்ற இலங்கை பொலிஸ் அதிகாரியான இவர்  நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
தமிழ் பேசும் இந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து இலங்கை தமிழர்களோடு சேர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் இவரால் இலங்கைக்கு திரும்ப முடியவில்லை.
இலங்கையிலுள்ள ஜமாலின் மனைவி அனுப்பிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு திரும்ப முயன்றபோதே இவர் விமான நிலைய அதிகாரிகாரிகளால் தடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

வாக்காளர் பற்றிய சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது: உச்ச நீதிமன்றம்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 01:38.17 PM GMT ]
வாக்காளர் பதிவு குறித்த சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இடம்பெயர் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் விசேட சட்ட மூலமொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானதா என உச்ச நீதிமன்றிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
இந்தச் சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம், சபாநாயகர் சமால் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சத்தியா ஹெட்டிகே, ரொஹினி மாரசிங்க ஆகியோர் இந்த விளக்கத்தை அளித்திருந்தனர்.
1983ம் ஆண்டு மே மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் இடம்பெயர்ந்த வடக்கு மக்கள் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்யக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten