zondag 9 juni 2013

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி


மஞ்சுள வெடிவர்தனவே எக்னலிகொடவை பிரான்ஸில் என்னிடம் காண்பித்தார்! அருந்திக பெர்ணான்டோ எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 12:05.16 AM GMT ]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பிரான்ஸில் வாழ்வதாக ஆளும் கட்சி எம்.பி அருந்திக பெர்ணான்டோ மீண்டும் பாராளுமன்றத்தில் உறுதியாகத் தெரிவித்தார்.
அவர் உயிருடன் வாழ்ந்தால் அவரை தம்மிடம் சேர்ப்பதற்கு அரசாங்கமும் அருந்திக பெர்ணான்டோ எம்.பியும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எக்னலிகொடவின் மனைவி சந்திரா எக்னலிகொட ஊடகங்கள் மூலமும், இணையத்தளங்கள் மூலமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அருந்திக பெர்ணான்டோ எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை எக்னலிகொட பிரான்சில் இருப்பதாக நாம் இரண்டு தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலையடுத்து தற்போது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களும் இணையத் தளங்களும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அருந்திக பெர்ணான்டோ எம்.பி இதனால் தமது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இது விடயத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றிய அருந்திக பெர்ணான்டோ எம்.பி மேலும் தெரிவித்ததாவது,
நான் பிரான்ஸ் சென்றபோது அங்கு ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தனவைச் சந்தித்தேன். அவரே பிரதீப் எக்னலிகொடவை எனக்குக் காண்பித்துள்ளதுடன் பிரான்சில் உள்ள பலரும் அவர் அங்கு வாழ்வதாக என்னிடம் தெரிவித்தனர்.
அத்துடன் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சுனந்த தேசப்பிரிய போன்ற வர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் பிரதீப் எக்னலிகொட இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 11:54.23 PM GMT ]
இலங்கையில் இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்தும் அவற்றுக்கு இந்திய உதவியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான சந்திப்பில் பேசப்பட்டதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  தெரிவித்தார்.
இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டவை குறித்து தமிழோசையிடம் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாம் விடுத்த அழைப்பின் பேரில், மலையகத் தமிழர்களை சந்திப்பதற்காக தூதுக்குழுவொன்றை அனுப்புவதற்கு சோனியா காந்தி சம்மதித்தாகவும் அவர் கூறினார்.
'13ம் திருத்தம் பற்றி பேசவில்லை'
இதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் பற்றியோ, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றியோ தாம் எதுவும் பேசவில்லை என்றும் மலையக மக்களின் கல்வி, சுகாதார மற்றும் அடிப்படைத் தேவைகள் பற்றியே பேசியதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் தெரிவித்தார்.
அரசியல் ரீதியான பிரச்சனைகளை இலங்கை அரசாங்கத்துடனே பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடிய வல்லமை தமது கட்சிக்கு இருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
இந்தியாவிடமிருந்து கடந்த காலங்களில் மலையகத் தமிழர்களுக்கென பல்வேறு உதவித் திட்டங்கள் கிடைத்ததாகவும் அவை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவ வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருப்பதாலேயே அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழோசை எழுப்பிய கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் தொண்டமான் கூறினார்.
ஆறுமுகன் தொண்டான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten