[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 12:25.49 AM GMT ]
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மீன்பிடிக்க சென்றிருந்த இராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 52 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.
கடந்த மாதம் இவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என மன்னார் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது.
இதையடுத்து ஏப்ரல் 15 ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால் சில காலம் மீனவர்கள் எந்த பிரச்சினையும் இன்றி இருந்தனர்.
இந்நிலையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 1ம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடந்த இருநாட்களாக மீன்பிடித்து பிரச்சினை ஏதும் இன்றி கரை திரும்பிய மீனவர்கள், நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூன்றாவது நாட்களாக மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அவர்களது 6 விசைப்படகுகளையும், அதில் சென்றிருந்த 24 மீனவர்களையும் இலங்கை சிங்கள கடற்படையினர் பிடித்து சென்றிருப்பதாக தகவல் வந்துள்ளது.
2ம் இணைப்பு
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை கைது செய்யப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்களும் மன்னார் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்படி அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் இணைப்பு
இந்திய மீனவர்கள் 49 பேர் இதுவரையில் இலங்கை கடற்படையால் கைது- ஒரு படகும் நீரில் மூழ்கியது
இலங்கை கடற்பகுதிக்குள்ளாக அத்துமீறில் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சதீவிற்கு அண்மையில் வைத்து 25 இந்தியக் கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களில் இதுவரை 49 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீனவர்களை கரைக்கு கொண்டு செல்லும் போதே ஒரு படகு நீரில் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உங்கள் பிரச்சினைக்கு தீர்வு நீங்களே காணவேண்டும்!இந்தியாவால் அனுசரணையே வழங்க முடியும்- யாழில் இந்தியக் குழு
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 01:33.58 AM GMT ]
இந்தியா உங்கள் நண்பன். நீங்கள் எல்லோரும் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்காக நாம் எம்மாலான உதவிகளைச் செய்வோம்” என்று குறிப்பிட்ட ரவிசங்கர் பிரசாத், எந்தவொரு நாட்டின் மீதும் இந்தியா தனது ஆளுகையைச் செலுத்த முற்படாது என்றும் தெரிவித்தார்.
கடந்தகாலத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் கூறிய அவர், இலங்கைப் பிரச்சினையால் இந்தியா தனது முக்கிய தலைவர்களில் ஒருவரை இழக்கவேண்டி நேரிட்டதையும் நினைவூட்டினார்.
எனினும், கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்வது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும் என்றும், இதற்கு இந்தியா தன்னாலான பங்களிப்புக்களை தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இந்திய ராஜ்சபை பிரதி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், தற்போதைய நிலைவரங்கள் குறித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.
இதன்போது, பிரதானமாக, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா அரசாங்கத்தின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தைப் பாதுகாப்பது இந்தியாவின் கடமை என்று பலராலும் வலியுறுத்தப்பட்டது.
போருக்குப் பிந்திய சூழ்நிலையில், இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் துரித மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் என்பன குறித்தும் பாராட்டிப் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், எனினும், பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை, மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் உரிய தீர்வைக் காண இந்தியா உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
போருக்குப் பிந்திய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா வழங்கிவரும் பல்வேறு உதவிகளுக்கும் நன்றிய கூறிய மக்கள் பிரதிநிதிகள், எனினும், போர்ச்சூழலால் நலிவடைந்துபோன வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த இந்தியா மேலும் கைகொடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.
குறிப்பாக, வட பகுதியில் முற்றாகச் செயலிழந்துபோயிருக்கும் கைத்தொழில் முயற்சிகளை மீள ஆரம்பிக்கச் செய்வதற்கான தூண்டுதலை வழங்குவதற்கும், தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிகள், நீண்டகால அடிப்படையிலான கடன்களை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தொழில் முயற்சிகள் செயலழிந்துபோயுள்ள நிலையில், இளைஞர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிகள் அவசியமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தொழிற்பயிற்சி வழங்கல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இந்தியா தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு மீனவர் சமூத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten