தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

அச்சுறுத்தலின் பின்னணியில் அரசாங்கம் – சபையில் சுமந்திரன் சூடான வாதம்


கனடாவில் இயங்கும் ரொறன்ரோவின் குரல் அமைப்பினால் 18 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ வாகனம் கிளிநொச்சியில் கையளிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 01:21.49 PM GMT ]
கனடாவில் அதிகளவு தமிழ் அன்பர்களை இயக்குனர்களாக கொண்டு இயங்கிவரும் Toronto Voice of Humanity என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மனிதாபிமானத்திற்கான ரொறன்ரோவின் குரல் என்னும் அமைப்பினால்...
...18 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை. குகராசா மற்றும் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது..
கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலை செல்பவர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பூத உடல்களை கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு வறிய ஏழை மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இவ்வாறான இடர்களில் உள்ள வன்னி மக்களின் தேவைக்காக ஒரு மருத்துவ வாகனம் தேவை என்பதை கனடாவில் இயங்கிவரும் மேற்படி Toronto Voice of Humanity என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மனிதாபிமானத்திற்கான ரொறன்ரோவின் குரல் அமைப்பிற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் துணைத்தலைவர் திரு சஜீவன் பாண்டியன்தாழ்வு பிரதேச சபையின் தலைவர் திரு செந்தூரன் ஆகியோர் கூட்டாக விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க மேற்படி மனித நேய அமைப்பு கனடாவில் சில நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது.
ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளுக்கு கனடாவில் இயங்கிவரும் ஊடக நண்பர்கள் பெரிதும் உதவிகளை வழங்கியிருந்தனர். மொன்றியல் நகரில் இயங்கிவரும் அகரன் வானொலி நிறுவனத்தினரும் ஆதரவை வழங்கினர்.
இதன் மூலம் கனடாவில் சேகரிக்கப்பட்ட சுமார் 15000 டாலர்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டு அங்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் துணைத்தலைவர் திரு சஜீவன் பாண்டியன்தாழ்வு பிரதேச சபையின் தலைவர் திரு செந்தூரன் ஆகியோரின் கூட்டான மேற்பார்வையில் மேலும் பல அன்பர்களின் உதவியோடு மிகவும் பொருத்தமான மருத்துவ வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது.
இவ்வாகனம் 01.06.2013 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை. குகராசா மற்றும் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது..
அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் சிவஞானம் “இது ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் அமைப்பின் ஒரு அளப்பெரிய சேவையாகும்.
இந்த மனித நேய பணியில் ஈடுபட்டு கனடிய அன்பர்களின் நிதி அன்பளிப்புக்களைப் பெற்று எம்மோடு ஒத்துழைத்த மேற்படி Toronto Voice of Humanity என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மனிதாபிமானத்திற்கான ரொறன்ரோவின் குரல் அமைப்பின் தலைவர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் செயலாளர் திரு வி. எஸ். துரைராஜா ஆகியோருக்கும் ஏனைய இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேற்படி மனித நேயப்பணி தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தனது செய்தியில் “ கனடாவிலிருந்து வன்னி நோக்கி பல மனித நேயப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே மறுவாழ்வு என்னும் அமைப்பு பல உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் குறிப்பாக இந்த மருத்துவ வாகனம் கொள்வனவு செய்யும் விடயத்தில் சிரத்தையோடு ஈடுபட்ட திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் திரு வி. எஸ். துரைராஜா ஆகியோர் நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைக் குழுவில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் என்பதில் நமது இயக்கம் பெருமையடைகின்றது” என்றார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மாவை சேனாதிராசா பொன். செல்வராசா அரியநேந்திரன் யோகேஸ்வரன் சரவணபவன் சுமந்திரன் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஜேர்மனி
 imtc1974@yahoo.com


அச்சுறுத்தலின் பின்னணியில் அரசாங்கம் – சபையில் சுமந்திரன் சூடான வாதம்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 01:08.25 PM GMT ]
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டுள்ளது.
அதனாலேயே இதுவரையிலான விசாரணைகள் முற்றுப் பெறாமலும் குற்றவாளிகள் இனங்காணப்படாமலும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten