தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

நெடுந்தீவில் காணாமல் போன கடற்படைச் சிப்பாயின் சடலம் அனலைதீவு கடற்கரையில் மீட்பு


கடும் காற்றினால் களுத்துறை உட்பட கரையோர பகுதிகளில் 400 ற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 09:49.45 AM GMT ]
இலங்கையின் தென்பகுதியில்ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறையில் 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 292 வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில், கடும் காற்றினால் நாட்டின் பல்வேறு கரையோரப் பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சார விநியோக நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாணந்துறை, மற்றும் அம்பலாங்கொடை, மாத்தறை போன்ற பகுதிகளில் இதன் காரணமாக மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் பலியாகியுள்ளதாகவும் பலரைக் காணவில்லை எனவும், விமானப்படையினர் சிலரை மீட்டுள்ளதாகவும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான கடற்பகுதியில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலையால், ஐந்து மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அதிக மழை காரணமாக, மேல் கொத்மலையின் லக்ஸபான மற்றும் கெனியென் நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக பனிமூட்டம் காணப்படுகின்ற நிலையில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் களுகங்கை, ஜின்கங்கை மற்றும் களனி கங்கை என்பன பெருக்கெடுத்துள்ள நிலையில், அவற்றை அண்டிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
2ம் இணைப்பு
ஐந்து மீனவர்கள் பலி: 17 பேரைக் காணவில்லை!
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் 20 க்கும் அதிகமான படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும்இ அவற்றில் இருந்த 20 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.
பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
நெடுந்தீவில் காணாமல் போன கடற்படைச் சிப்பாயின் சடலம் அனலைதீவு கடற்கரையில் மீட்பு
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 09:37.15 AM GMT ]
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கரையோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் காணாமல்போன கடற்படைச் சிப்பாயின் சடலம் இன்று அனலதீவு பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கடற்படைச் சிப்பாய் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் படகிலிருந்து தவறி வீழ்ந்து காணாமல் போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில் குறித்த கடற்படைச் சிப்பாயின் சடலத்தை தேடும் பணி கடற்படையினரால் முடுக்கி விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனலதீவு மேற்குப் பகுதி கடற்கரையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆர்.சம்பத் என்ற 28வயதான கடற்படையின் கரையோர பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் என அடைய hளம் காணப்பட்டுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி

Geen opmerkingen:

Een reactie posten