தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 juni 2013

பாதை, விமான நிலையங்கள் மட்டும் அமைப்பது அபிவிருத்தியாகுமா?


களனி பல்கலை. விடுதியில் நேற்றிரவு விஞ்ஞானபீட மாணவர்கள் மீது தாக்குதல்! 6 பேர் காயம்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 05:29.42 AM GMT ]
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் விடுதி மாணவர்கள் மற்றும் வெளி மாணவர்களுக்கு இடையில் இம்மோதல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் நால்வர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதை, விமான நிலையங்கள் மட்டும் அமைப்பது அபிவிருத்தியாகுமா?
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 06:22.08 AM GMT ]
பாதை, விமான நிலையங்கள் மட்டும் அபிவிருத்தியாகுமா? அபிவிருத்தி என்பது ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் கடமை. எனவே தான் அபிவிருத்தி மட்டுமல்ல எங்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட..
.. அனைத்து விடயங்களிலும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
நேற்றைய தினம், உன்னிச்சை நெடியமடுவில் நடைபெற்ற அப்பிரதேச கிராம அபிவித்திச் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர், எஸ்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந் நகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வயதில் என்னைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமை உங்களையே சாரும். அதற்காக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாராளுமன்றம் சென்ற போது, அந்த நேரத்தில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விரும்பாத பிரச்சினைகள் காரணமாக எனது சேவையை முழுமையாகச் செய்ய முடியாது போனது.
இருந்தாலும் என்னால் முடிந்தளவுக்கு சேவையைச் செய்தேன். மக்களுடைய மக்களுடைய தேவையை அறிந்து சேவை செய்ய முயொத நிலையில் வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வாழ்ந்த படித்த கல்வி மான்கள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் செல்ல வே;டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது நீஞ்கள் அறிந்ததே.
இருந்தாலும் அரசியலில் இன மத பேதங்களைக் கடந்து சேவை செய்வது என் வழக்கம். அ ந்த வகையில், 17 வருடங்களுக்குப்பிறகு இங்கு வந்து இந்த சுமுகமாக சூழலில் மீண்டும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
எனக்குப் பணமோ, பட்டமோ பதவியோ அவசியமல்ல. துன்பப்படுகின்ற மக்களின் இடங்களுக்குச் சென்று சேவை செய்யவேண்டும் என்பதே அவசியமாகும்.
எனவே தான் என்னை இந்த மாகாண சபைக்கும் தெரிவு செய்திருக்கிறீர்கள். அதன் ஊடாக கிடைக்கின்ற உதவிகளைக் கொண்டும் என் பிற முயற்சிகளாளும் சேவை செய்து அபிவிருத்தி காண வேண்டும் என்பதே என் நோக்கம்.
இன்றைய அரசின் நிலை என்ன என்று நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். எமது முன்னோர்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்களைச் செய்தும் எந்தத் தீர்வுமே கிடைக்காத போது, இதனை அவதானித்த நான் எனது உயர் கல்வியைத் துறந்து இளைஞர் சக்தி கொண்டு ஆயுதப் போராட்டத்தில் இணைந்தேன். அதுவும் முடியாது போனது.
இன்றைய குடும்ப ஆட்சி, பாதைகளையும், விமான நிலையங்களையும் செய்து விட்டு எமது நாடு அபிவிருத்தி கண்டுவிட்டது என்று சொல்வது முழு அபிவிருத்தி ஆகுமா?.
அபிவிருத்தி என்பது ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் கடமை. சொந்தப்பணத்தில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எனவே தான் அபிவிருத்தி மட்டுமல்ல எங்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது எனது கடமை. அதற்காக என் இறுதி மூச்சுவரை பாடுபடுவேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten