maandag 10 juni 2013

சம்மாந்துறையில் 6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 60 வயது வயோதிபர் கைது


மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரின் மகளுக்கு மனநல பரிசோதனை
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 11:38.38 AM GMT ]
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மூத்த மகளை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ம் திகதி தனது தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரோஹண விஜயவீரவின் மூத்த மகளான தசுனி ரிஷாவையை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை நேற்று வத்தளை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் வைத்திய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறையில் 6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 60 வயது வயோதிபர் கைது
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 11:43.02 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பட்டி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 60 வயது வயோதிபர் ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ் வயோதிபரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான குறித்த சிறுமி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இவர்கள் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சிறுமியின் பெற்றோர் விட்டில் இல்லாத நேரத்தில் இச்சிறுமியை அழைத்த வயோதிபர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் பெற்றோர் சம்பவத்தினை அறிந்ததும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten