maandag 10 juni 2013

யாழில் 15 வயது சிறுமி கடத்தல்!- சந்தேகத்தில் 65 வயது பெண் கைது !


யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வைத்து 15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  65 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று யாழ். நல்லூர் கொண்டலடிப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை மூன்று பேர் கொண்ட குழுவினர் முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர்.
அந்தக் கும்பல் சிறுமி அணிந்திருந்த சங்கிலி, தோடுகள் நகைளை பறித்து விட்டு ஆள் நடமாட்டமில்லாத வல்லை வெளியில் வீசிவிட்டு குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.
கடத்தி சென்ற கும்பலில் பெண்ணொருவர் உட்பட இரு ஆண்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வயோதிப பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடத்தி சென்று தூக்கி வீசப்பட்ட சிறுமி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணை யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார்  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்பட்ட பகைமை காரணமாகவே குறித்த சிறுமி கடத்தப்பட்டிப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten