[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 11:40.22 PM GMT ]
தற்போது இந்தப் பதவியை வகிக்கும், சுசன் ரைஸ் அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்கு முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுடன் சமந்தா பவரும், சுசன் ரைசும் தீவிரமாக இணைந்து செயற்பட்டவர்களாவர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் இவர்கள் இருவரினதும் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது.
இந்தநிலையிலேயே சமந்தா பவர், ஐ.நாவுக்கான தூதுவராகவும், சுசன் ரைஸ் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலாசகராகவும் பதவி உயர்த்தப்படவுள்ளனர்.
சமந்தா பவர் ஒரு முன்னாள் ஊடகவியலாளராவார். பொஸ்னிய இனப்படுகொலைகளைத் தடுக்க அமெரிக்கா தவறியதாக குற்றம் சாட்டும் A Problem from Hell: America and the Age of Genocide என்ற இவரது நூலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. பின்னர் இவர் ஹவார்ட் பல்கலைக்கழக பேராசிரியராகவும், பணியாற்றியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சமந்தா பவர், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் ஒருவராக இருந்து வருகிறார். இவர் ஒபாமாவின் நெருங்கிய, நீண்டகால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவுக்கான தூதுவராக சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ள நிலையில், சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும், மனித உரிமை விவகாரங்களிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இறுக்கமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
13வது சட்டத்திருத்த பிரேரணைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும்!- ரவூப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 12:00.29 AM GMT ]
13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றும், இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சரான ஹக்கீம் தெரிவித்தார்.
ஆளும் கூட்டணியின் கட்சிகளின் கூட்டம் இது குறித்து கலந்தாலோசிக்க கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூட்டப்பட்ட போது, தான் நாட்டில் இல்லை, ஆனால் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாகத் தெரிந்த பின்னர், தனது பாலத்தீனப் பயணத்தை ரத்து செய்து இலங்கை விரைந்ததாகத் தமிழோசையிடம் தெரிவித்தார் ரவூப் ஹக்கீம்.
இந்த பிரேரணைகளை பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமாக இருப்பதாக தாங்கள் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது தனது கட்சிக்கு இது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய அவகாசம் வேண்டுமென்று தானும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க ஒரு வார கால அவகாசம் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவு செய்த்தாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசு சார்பில் இரு மாகாணங்கள் விரும்பினால் அதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கும், மாகாண சபைகளுக்கு சட்டவாக்கல் குறித்த அதிகாரங்களைத் தரும் 154 ஜி என்ற பிரிவின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களில் பெரும்பான்மை மாகாணங்கள் விரும்பினால், அதிகாரங்களை ரத்து செய்வதற்கும் பிரேரணைகள் முன்வைக்கபட்ட்தாக ரவூப் ஹக்கிம் உறுதிப்படுத்தினார்.
13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றார் ஹக்கீம்.
இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றார் ஹக்கீம்.
Geen opmerkingen:
Een reactie posten