தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

இந்து ஆலயங்கள் மீது தொடரும் தாக்குதல்: திருமலை கற்பக விநாயகர் ஆலய கோபுரத்தில் 13 பாவைகள் சேதம்


ரிசானாவை சவூதிக்கு அனுப்பிய முகவர் நிலையம் வேறு பெயரில் பதிவு?
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 12:23.05 PM GMT ]
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த முகவர் நிறுவனம் இரு வேறுபெயர்களில் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்து ஆலயங்கள் மீது தொடரும் தாக்குதல்: திருமலை கற்பக விநாயகர் ஆலய கோபுரத்தில் 13 பாவைகள் சேதம்
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 09:05.12 AM GMT ]
கிழக்கில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும், குருக்கள்மார் கொல்லப்பட்டும் வரும் சம்பவங்கள் சிங்கள அரசாங்கத்தின் தமிழர் மீதான வெறித்தனத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றது.
இவை ஓர் திட்டமிட்ட கலாசாரக் கொலையாகும். இன்று திருகோணமலையில் நடந்த சம்பவமும் அதன் ஒரு தொடர் சம்பவம்தான்.
இந்நிலையில், திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 பாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் எ.நடராசா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten