| நாளுக்கு நாள், படகுகள் மூலம் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துகொண்டு இருக்கும் இவ்வேளை, அவர்கள் உண்மையில் அகதிகள் அல்லர் என்றும் சுகபோக வாழ்விற்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடும் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ள அவுஸ்திரேலிய அரசின் நடைமுறைகளை உடைக்கும் வண்ணம், அந் நாட்டு தொலைக்காட்சி நேற்றையதினம் ஒரு நிகழ்சியை ஒளிபரப்பியுள்ளது. தாயகத்தில் இறுதிப் போரில் நின்று பல செய்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த ஊடகவியலாளர்களை முன் நிறுத்தி இன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், எவ்வகையான குண்டுகள் இலங்கை அரசால் பாவிக்கப்பட்டது என்பது தொடர்பாக பல தகவல்கள் வெளியிடப்பட்டது. இதன் காணொளியும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. |
| 26 Sep 2012 http://jvpnews.com/index.php?subaction=showfull&id=1348673848&archive=&start_from=&ucat=1& |
Geen opmerkingen:
Een reactie posten