vrijdag 5 augustus 2011

முன்னாள் போராளிகளைக் கொண்டு ஆபத்தான பகுதிகளை துப்பரவு செய்யும் படையினர்!

இறுதிக் கட்ட யுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து தொழிற்பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் அரசானது தற்போது இவர்களைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடாவில் தூர்ந்து போய்க் காணப்பட்ட பெரியகுளத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் படையினரையோ அல்லது ஏனையோரையோ துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தாமல் முன்னாள் பேராளிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துப்புரவு செய்யும் பணிகளில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகள் மட்டுமின்றி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஆலோசனைக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten