தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

2015 ஜனாதிபதித் தேர்தல்! மகிந்தவா? மைத்திரியா? நீங்களும் வாக்களிக்கலாம்

போர் முடிவுக்கு வந்ததன் பலன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன: மகிந்த
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 12:55.35 PM GMT ]
போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பிரதிபலன்களை ஏற்கபனவே மக்களுக்கு வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் தேவைகளை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம் அவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்தும் வழங்க கடமைப்பட்டுள்ளது.
உலர் வலய மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க தெதுருஓயா திட்டத்தை ஆரம்பித்து நிறைவு செய்துள்ளதாகவும் ஏனைய பணிகளை முடித்த பின்னர் மக்களுக்கான தண்ணீர் விநியோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalt7.html
பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி மைத்திரிக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 01:03.28 PM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, அந்த அமைப்பில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக அதன் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கொள்கைக்கு மாறியுள்ளதால், அந்த அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அமைப்பை கைவிட்டுள்ளனர்.
அத்துடன் பொதுபல சேனாவின் ஆதரவை பெற்றுள்ளமை காரணமாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் சிறுபான்மை இன கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில், ஊடக சந்திப்புகளின் போது ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான கருத்துக்களை வெளியிடக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்புக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே டிலாந்த விதானகே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் ஞானசார தேரரை அமைப்பில் இருந்து நீக்கி விட்டு, பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதே அவரது திட்டம் என தெரியவருகிறது.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை வாக்குகளை ஈர்த்து எடுக்கும் சதித்திட்டமாகவும் இது இருக்கலாம் என பொதுபல சேனா அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCScKaluy.html
அரச வளங்களை பயன்படுத்துவதில் மகிந்த உலக சாதனை: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 01:35.43 PM GMT ]
அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு அரச வளங்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தளவுக்கு அரச அதிகாரத்தை அரச வளங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே மகிந்த ராஜபக்ஷ தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
வீதிகளில், மின்கம்பங்களில் கட்அவுட்கள் கட்டப்பட்டன. வீதிகளை மூடும் அளவுக்கு கட்அவுட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பும், சட்டத்தரணிகள் சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க தயாரானதும் கட்அவுட்களை அகற்ற வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
அத்துடன் பல அரச நிறுவனங்களில் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu0.html
முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் கொள்ளையிட்ட நபர் கைது
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 02:18.34 PM GMT ]
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்ட நபர், கொழும்பு- கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களுடன் இருந்த குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் வாக்குமூலம் அளித்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் வசமிருந்து பத்து இலட்சத்துக்கும் அதிகமான பணம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு - 07 பகுதியைச் சேர்ந்த இவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் இருந்த 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் 21ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu1.html
2015 ஜனாதிபதித் தேர்தல்! மகிந்தவா? மைத்திரியா? நீங்களும் வாக்களிக்கலாம்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 02:45.16 PM GMT ]
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில் லங்காசிறி இணையத்தளமானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றினை நடாத்துகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் யார் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.
வாசகர்கள் தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யமுடியும். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பின்னர் முடிவுகள் உடனடியாக கலந்து கொண்டவருக்கு காண்பிக்கப்படும்
இந்த வாக்கெடுப்பில், இலங்கையில் உள்ள  வாசகர்களிடமிருந்தே அதிக பதில்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ( 90 வீதமான பதில்கள்) ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 வீதமே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முடிவுகள் 07.01.2015 அன்று வெளியிடப்படும். அத்துடன் முடிவுகளை எவரும் பார்க்க முடியும். கருத்து கணிப்பு நடத்தப்படும் இணையத்தளம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். இரண்டாவது தடவை வாக்களிக்க முற்பட்டால் “Thank you, we have already counted your vote” இவ்வாறு ஆங்கிலத்தில் பதில் வரும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
http://poll.fm/52vgb
http://www.tamilwin.com/show-RUmszCScKalu2.html

Geen opmerkingen:

Een reactie posten