தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 april 2013

நம்பிட்டோம்!!-டுபாயில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நிலை என்ன? நா. தமிழீழ அரசாங்கம் விளக்கம்


[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 12:04.57 PM GMT ]
சமீபத்திய நாட்களில் டுபாயில் தஞ்சமடைந்திருந்த 46 ஈழத்தமிழ் அகதிகள் நிலை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கி கடல்வழிப் பயணமாக சென்று கொண்டிருந்த வேளை பயணம் செய்த கப்பலில் ஏற்பட்ட உடைவு காரணமாக சிங்கப்பூரினை அண்டிய நடுகடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 46 ஈழத் தமிழர்கள் டுபாய் நாட்டு கப்பலொன்றினால் காப்பாற்றப்பட்டு டுபாயக்கு கரை சேர்க்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் கடந்தாண்டு (2012) ஓக்ரோபர் மாதத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் இவ்விவகாரம் உடனடியாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசாமி அவர்கள் அகதிகள் நலன் தொடர்பிலான பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.
தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பினை வழங்க கோரியும் அவர்கள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பபடும் பட்சத்தில் நேரிடக்கூடிய அபாயங்கள் பற்றியும் டுபாயின் வெளிவிவகார அமைச்சுக்கும் குறித்த மாநில அமைச்சருக்கும் அவசர கடிமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக மட்டத்தில் அகதிகள் விவகாரங்களில் அனுபவமிக்க கனேடிய வழக்கறிஞர் David metas அவர்கள் இவ்விவகாரம் குறித்து அபுதாபி மற்றும் ஜெனீவாவில் உள்ள ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்த்தின் உயர் காரியாலங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தஞ்சடைந்திருந்த 46 ஈழத்தமிழ் அகதிகளில் 8 பேருக்கு சுவீடன் நாடு அகதி அந்தஸ்தினை வழங்கியுள்ளது. 21 பேரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த அமெரிக்கா இதுவரை 12 பேரை ஏற்றுக் கொண்டுள்ளது.
6 பேரை திருப்பி அனுப்பியிருந்த நிலையில் மீதி இருக்கும் 19 பேரை இதுவரை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் தற்போது அவர்களை டுபாய் அதிகாரிகள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப் போவதாகக் தெரிவித்துள்ளனர்.
மீதியிருக்கும் இந்த 19 பேரில் பெரும்பாலோர் வயதில் குறைந்த இளைஞர்களும் பெண்களுமாவர்.
அவர்களில் தமிழீழ ஊடகத்துறையில் பணியாற்றியவர்களும் உள்ளனர். அவர்கள் சிறிலங்காவுக்கு திருப்பியனுப்பப்படவிருக்கும் இந்நிலையில் இந்த விடயம் மிகவும் உணர்வுபூர்வமானதும், நுட்பமாகக் கையாள வேண்டியதுமாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசாமி அவர்கள் வழகறிஞர் David metas அவர்களுடன் இணைந்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தேவையேற்படும் பட்சத்தில் David metas அவர்கள் நேரடியாக டுபாய் செல்வதற்கும் ஆயத்தமாகி வருகிறார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியா, ஜக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள அகதிகள் விவகாரம் குறித்து சம்பந்தபட்ட நாடுகளது அமைச்சக மட்டத்திலான செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:

Een reactie posten