[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 07:46.20 AM GMT ]
தமிழக மீனவர்கள் நம் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தால்கூட உள்ளே வந்து அவர்களை தாக்கி வலைகளை அறுத்து சேதப்படுத்தி, மீன்களை அள்ளிக் கொண்டு விரட்டியடிப்பது இலங்கை கடற்படையின் வழக்கம்.
ஆனால் டீசல் இல்லாமல் திசை மாறி இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட இலங்கை மீனவர்களை இங்குள்ளவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
கடந்த மாதம் 23ஆம் தேதி இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் இருந்து பைபர் போட்டில் மீன் பிடிக்க கிளம்பினார்கள் சுமணன், சந்துரு என்ற இரு மீனவர்கள். நடுக்கடலில் படகு திசை மாறிவிட, இருந்த டீசலும் தீர்ந்து போய் விட்டிருக்கிறது. இந்த நிலையில் கடலில் இறங்கி படகை தள்ளிக் கொண்டா போக முடியும்?
காற்றின் திசையில் நகர்ந்த படகு 25ஆம் தேதி கோடிக்கரையில் படகு கரை ஒதுங்கியது. அதிலிருந்து இறங்கிய இருவரையும் வரவேற்ற நம்ம மீனவர்கள் அவர்களுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொல்லி சுங்கத் துறைக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். அவர்களும் மரைன் போலீசாரும் வந்து அழைத்துப்போய் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
மேலதிகாரிகளோ, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் பதினைந்து நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் முடிந்து நேற்று முன்தினம் அவர்களை திரும்பவும் வேதாரணியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு நம் கடலோர காவல் படையினர் இந்திய கடற்படையிடம் அவர்களை ஒப்படைத்தனர். இந்திய கடற்படையினர் இருவரையும் அழைத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் இருந்த இலங்கை கடற்படையினரிடம் முறைப்படி ஒப்படைத்திருக்கிறார்கள்.
எனக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா இரத்தமா?
எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 49 பேரையும் கைது செய்யாது ஒப்படைத்த இலங்கை கடற்படை
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 07:33.22 AM GMT ]
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இலங்கை கடற்படை திரும்ப ஒப்படைத்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 49 மீனவர்கள் 5 படகுகளில் இந்திய கடல் எல்லையை விட்டு இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க நுழைந்துள்ளனர்.
இதன்போது, இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 49 பேரையும் பிடித்து, ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இன்று 9.45 மணிக்கு காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் கைது செய்யாமல், ஒப்படைந்த சம்பவமானது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவா இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியது? - கோத்தபாயவுக்கு நாராயணசாமி கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 07:29.35 AM GMT ]
இந்தியா பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால், விடுதலைப் புலிகளுடனான போர் 30 ஆண்டு நடந்திருக்காது என இலங்கை அதிபர் ராஜபக்சவின் தம்பியும், அந்த நாட்டின் இராணுவத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:
இலங்கையில் தீவிரவாதத்தை இந்தியா தான் தூண்டிவிட்டது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று.
உலகத்தில் எந்தப் பகுதியில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதனை மத்திய அரசு எப்போதுமே சிறப்பாக செய்து வருகிறது.
ராஜிவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது கூட ஈழத் தமிழர்கள் நலனுக்காக அமைதிப்படையை அனுப்பினார் என்று நாராயணசாமி கூறினார்.
மேலும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்காக, கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
http://news.lankasri.com/show-RUmryESWNamq2.html
| Gotabaya's Remarks Not Acceptable: Narayanasamy |
| [ Friday, 12 April 2013, 11:01.46 AM GMT +05:30 ] |
| Responding to Sri Lankan Defence Secretary Gotabaya Rajapaksa's reported remark that India could never absolve itself of the responsibility for creating terrorism in his country, Union Minister V Narayanasamy said the statement was not acceptable. "As far as India is concerned (late Prime Ministers) Indira and Rajiv Gandhi supported Tamils. We even lost Rajiv Gandhi (in an assassination by LTTE). He sent Indian Peace Keeping Force to help Tamils. Rajapaksa's statement is unacceptable. Sri Lanka is responsible for terrorism as Tamils took to terrorism because their rights were denied," he told reporters at the airport here. New Delhi did not support any kind of terrorist activities, he said. India has a duty to protect Tamils wherever they are and it had pressed for independent and credible investigation into alleged war crimes by Sri Lankan army at the UNHRC, he said. "Unfortunately, state political parties are concealing that. The truth will come out ultimately," the Minister of State in the PMO added. He also denied the Centre was not acting on attacks on fishermen from Tamil Nadu by Sri Lankan Navy. Indian consular officials were immediately asked to work for the release of fishermen arrested by that Navy, he said, adding that talks between fishermen of the two countries could ensure a lasting solution to the matter. The minister also called for more patrolling of Indian Coast Guard and Naval ships in the area to prevent attacks on local fishermen. http://eng.lankasri.com/view.php?22eOld0acp5YOd4e34MC302cAmB3ddeZBmS302eWAA2e4KY5naca2lOK42 |
Geen opmerkingen:
Een reactie posten